#ENGvsNZ முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Jun 2, 2021, 3:47 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் நடக்கிறது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கும் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போடப்பட்டு 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), டேனியல் லாரன்ஸ், ஆலி போப், ஜேம்ஸ் ப்ரேஸி(விக்கெட் கீப்பர்), ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங்(விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர், கைல் ஹாமிச்ன், டிம் சௌதி, நீல் வாக்னர்.
 

click me!