#IPL2021 ஏகப்பட்ட மெயின் தலைகள் காலி..! 2 அணிகளுக்கு கடும் பாதிப்பு.. ஆகாஷ் சோப்ரா அதிரடி

By karthikeyan VFirst Published Jun 2, 2021, 3:25 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் கடுமையாக பாதிக்கப்படப்போகும் 2 அணிகள் எவை என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளும் வரும் செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இது ஐபிஎல் அணிகளை பாதிக்கும். 

இந்நிலையில், வங்கதேச வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐபிஎல்லில் ஆட தடையில்லா சான்று வழங்கவில்லை. ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், ஃபாஸ்ட் பவுலர் என்று முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகிய இருவரும் ஆடமாட்டார்கள். 

இவ்வாறாக அடுத்தடுத்து பல நாடுகளின் வீரர்கள் ஐபிஎல்லில் ஆடமுடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இதனால் கடுமையாக பாதிக்கப்படப்போகும் அணிகள் எவை என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தான் கடுமையாக பாதிக்கப்படும் என்றார். கேகேஆர் அணியில் மோர்கன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் ஆடமுடியாத நிலையில், ஷகிப் அல் ஹசனும் ஆடவில்லை என்றால் அது கடும் பாதிப்பாக அமையும் என்றார்.

அதேபோலவே பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இங்கிலாந்து வீரர்களை இழந்து தவிக்கும் ராஜஸ்தான் அணியில் முஸ்தாஃபிசுர் ரஹ்மானும் ஆடவில்லை என்றால் கண்டிப்பாக அந்த அணியும் கடுமையாக பாதிக்கும் என்பதால், கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தான் அதிகமாக பாதிப்படையும் அணிகள் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
 

click me!