#ICCWTC ஃபைனல்: மைக்கேல் வான் மாதிரியான ஆட்களை செம கிழி கிழித்த கவாஸ்கர்

By karthikeyan VFirst Published May 31, 2021, 9:24 PM IST
Highlights

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் இங்கிலாந்தில் நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்று சிலர் கருத்து தெரிவித்த நிலையில், அப்படியானவர்களை அவநம்பிக்கையாளர்கள் என கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
 

ஐசிசி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்திவரும் நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், வரும் ஜூன் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த இறுதி போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இரு அணிகளுமே இறுதி போட்டியில் வென்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன், நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகள் ஆடுவது நியூசிலாந்துக்கு கூடுதல் பலமாக அமையும். அதுமட்டுமல்லாது, இங்கிலாந்து கண்டிஷன் இந்திய அணியைவிட நியூசிலாந்துக்கு கூடுதல் சாதகமாக அமையும் என்றும் மைக்கேல் வான், பாட் கம்மின்ஸ் ஆகிய சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் இங்கிலாந்தில் நியூசிலாந்து ஆடும் 2 டெஸ்ட் போட்டிகள், அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என்று சில அவநம்பிக்கையாளர்கள் கருத்து கூறுகின்றனர். இங்கிலாந்து கண்டிஷனுக்கு தயாராக உதவும் அவர்கள் பிதற்றுகிறார்கள். 

அதை அப்படியே வேறு மாதிரி கூட பார்க்கலாம். அந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்திடம் நியூசிலாந்து தோற்றுவிட்டால் அவர்களது நம்பிக்கை குறையக்கூடும்.  மேலும் ஒருவேளை அந்த டெஸ்ட் போட்டிகளில் ஏதாவது முக்கியமான வீரர் காயமடைந்தால் அதுவும் பாதிப்பாக அமையலாம். ஆனால் இந்திய அணி ஃப்ரெஷ்ஷாக ஃபைனலில் ஆடும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!