சமகாலத்தின் தலைசிறந்த வீரர் தேர்வு செய்த உலக டெஸ்ட் லெவன்..!

Published : May 31, 2021, 08:13 PM IST
சமகாலத்தின் தலைசிறந்த வீரர் தேர்வு செய்த உலக டெஸ்ட் லெவன்..!

சுருக்கம்

சமகாலத்தின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.   

சமகாலத்தின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 

வார்னர், ரோஹித் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள கம்மின்ஸ், 3ம் வரிசையில் தேர்வு செய்த கேன் வில்லியம்சனை உலக டெஸ்ட் லெவன் அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். 

4 மற்றும் 5ம் வரிசைகளில் முறையே ஸ்மித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் தேர்வு செய்த கம்மின்ஸ், ஆல்ரவுண்டராக பென் ஸ்டோக்ஸையும், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்தார்.

ஸ்பின்னராக நேதன் லயன் ஒருவரை மட்டும் தேர்வு செய்த கம்மின்ஸ், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ரபாடா ஆகிய இருவருடன் தன்னையும் சேர்த்துக்கொண்டார்.

கம்மின்ஸ் தேர்வு செய்த உலக டெஸ்ட் லெவன்:

டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ரபாடா, பும்ரா, நேதன் லயன். 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்த KKR... பிளேஆஃப் ரேஸில் கொல்கத்தா... அந்த 4வது இடம் யாருக்கு?
Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்