2031ம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் வெளியீடு..!

Published : Jun 02, 2021, 07:20 PM IST
2031ம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் வெளியீடு..!

சுருக்கம்

2024 முதல் 2031ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்படும் ஐசிசி தொடர்கள் வெளியிடப்பட்டுள்ளது.  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) போர்டு மீட்டிங் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில், ஒருநாள் உலக கோப்பையில் 14 அணிகளை ஆடவைப்பது, சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் நடத்துவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்துவது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை ஐசிசி எடுத்துள்ளது. 

மேலும் 2024 முதல் 2031ம் ஆண்டு வரை நடக்கவுள்ள ஐசிசி தொடர்கள் வெளியிடப்பட்டன.

2024-2031 காலக்கட்டத்தில் நடைபெறவுள்ள ஐசிசி தொடர்கள்:

2024 -  ஆடவர், மகளிர் டி20 உலக கோப்பை

2025 - ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  ஃபைனல், மகளிர் ஒருநாள் உலக கோப்பை

2026 - ஆடவர், மகளிர் டி20 உலக கோப்பை

2027 - ஆடவர் ஒருநாள் உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஃபைனல், மகளிர் டி20 சாம்பியன்ஸ் டிராபி

2028 - ஆடவர், மகளிர் டி20 உலக கோப்பை

2029 - ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், மகளிர் ஒருநாள் உலக கோப்பை

2030 - ஆடவர், மகளிர் டி20 உலக கோப்பை

2031 - ஆடவர் ஒருநாள் உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், மகளிர் டி20 சாம்பியன்ஸ் டிராபி.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!