IPL 2023: டெவான் கான்வே & ஷிவம் துபே அதிரடி அரைசதம்..! ஆர்சிபிக்கு கடின இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே

By karthikeyan V  |  First Published Apr 17, 2023, 9:46 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 226 ரன்களை குவித்து, 227 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது. 
 


ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் இன்று ஆடிவருகின்றன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

ஆர்சிபி அணி:

Tap to resize

Latest Videos

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படே, வைன் பார்னெல், முகமது சிராஜ், வைஷாக் விஜய்குமார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மதீஷா பதிரனா, மஹீஷ் தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே.

IPL 2023: மன்னிப்புலாம் கேட்காதடா தம்பி.. நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்! இந்திய வீரரை உசுப்பிவிட்ட பாண்டிங்

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றினார். 2வது விக்கெட்டுக்கு டெவான் கான்வே மற்றும் அஜிங்க்யா ரஹானே இணைந்து அடித்து ஆடி 74 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய ரஹானே 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபேவும் அதிரடியாக ஆடினார். கான்வே மற்றும் துபே ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர்.

IPL 2023:சுனில் நரைனின் 12ஆண்டுகால ஐபிஎல் கெரியரில் மோசமான ஸ்பெல்! நரைனை நார் நாராய் கிழித்த மும்பை இந்தியன்ஸ்

டெவான் கான்வே 45 பந்தில் 83 ரன்களையும், துபே 27 பந்தில் 52 ரன்களையும் குவித்தனர். கான்வே, துபேவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 226 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 227 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்தது.
 

click me!