இது ஜெய்ப்பூர் கோட்டை - ஆர் ஆர் அணிக்கு தான் சாதகமா? டெல்லிக்கு வெற்றியா? தோல்வியா?

By Rsiva kumar  |  First Published Mar 28, 2024, 8:39 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.


ஐபிஎல் 2024 தொடரின் 9ஆவது லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ராஜஸ்தானின் கோட்டையான ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டி என்பதால், ஹோம் மைதான அணி வெற்றி பெற்று வரும் நிலையில் இந்தப் போட்டியில் ஆர் ஆர் அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்தப் போட்டியில் டெல்லி அணியில் முகேஷ் குமார் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். இதுவரையில் இரு அணிகளும் மோதிய 27 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளிலும், 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய முதல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

டெல்லி கேபிடல்ஸ்:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி பூய், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.

மாற்று வீரர்கள்: அபிஷேக் போரெல், ஜாக் பிரேசர் – மெக்குர்க், பிரவீன் துபே, குமார் குஷாக்ரா, ரஷீக் தர்

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சகால், சந்தீப் சர்மா, ஆவேஷ் கான்.

மாற்று வீரர்கள்:

ரோவ்மன் பவல், நந்த்ரே பர்கர், தனுஷ் கோட்டியன், ஷுபம் துபே, குல்தீப் சென்.

click me!