போட்டி போட்டு சிக்சரும், பவுண்டரியுமா விளாசிய ஷெஃபாலி வர்மா, மேக் லேனிங் - டெல்லி கேபிடல்ஸ் 223 ரன்கள்!

Published : Mar 05, 2023, 05:30 PM IST
போட்டி போட்டு சிக்சரும், பவுண்டரியுமா விளாசிய ஷெஃபாலி வர்மா, மேக் லேனிங் - டெல்லி கேபிடல்ஸ் 223 ரன்கள்!

சுருக்கம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 223 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, கிரித்தி சனோன் ஆகியோரது நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகமே எதிர்பார்த்த முதல் போட்டி தொடங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. 

ரயிலை போன்று வேகமாக நடையை கட்டிய குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகள்: ஆறுதல் கொடுத்த தமிழக வீராங்கனை ஹேமலதா!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டெவைன், ஹீதர் நைட், திஷா கசாட், எல்லிசே பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹூஜா, ஆஷா ஷோபனா, பிரீதி போஸ், மேகன் ஸுட், ரேணுகா தாகூர் சிங்.

டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி:

ஷெஃபாலி வெர்மா, மெக் லெனிங் (கேப்டன்), மரிஷனே கப், ஜெமைமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்சி, ஜெசி ஜோனாசென், தனியா பட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், டாரா நோரிஸ்

WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

அதன்படி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியின் கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷெஃபாலி வர்மா ஆகியோர் ரன் கணக்கை தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஷெஃபாலி வர்மா ஒவ்வொரு பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்காமல் ஒவ்வொருவரது ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி தள்ளினர்.

தொடக்க வீராங்கனைகள் இருவரும் அதிரடி காட்டி விளையாட முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தனர். மெக் லேனிங் 43 பந்துகளில் 14 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் அடித்தார். ஷெஃபாலி வர்மாவும் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 4 சிக்சர்கள் 10 பவுண்டரிகள், உள்பட 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 

9 சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டு 6 சாதனைகளை தகர்த்த தமிழக மாணவிகள்!

எனினும், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிகமாக ரன் அடித்த முதல் வீர்ர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 65 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதோடு அந்த அணி 207 ரன்கள் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து வந்த கேப் 39 ரன்களும், ஜெமைமா ரோட்ரிக்ஸ் 22 ரன்களும் எடுக்கவே டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்து 200 ரன்களுக்கு மேல் குவித்த 2ஆவது அணி என்ற பெருமையையும், மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் அதிக ரன்கள் குவித்த முதல் அணியை என்ற சாதனையையும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி படைத்துள்ளது. 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!