#RRvsDC பவர்ப்ளேயில் பட்டைய கிளப்பிய உனாத்கத்..!சீட்டுக்கட்டுபோல் சரிந்த டெல்லி பேட்டிங் ஆர்டர்

Published : Apr 15, 2021, 08:23 PM IST
#RRvsDC பவர்ப்ளேயில் பட்டைய கிளப்பிய உனாத்கத்..!சீட்டுக்கட்டுபோல் சரிந்த டெல்லி பேட்டிங் ஆர்டர்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலர்களிடம் மளமளவென விக்கெட்டுகளை இழந்துவருகிறது டெல்லி கேபிடள்ஸ் அணி.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன்  சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவை 2வது ஓவரிலேயே வெறும் 2ரன்னில் வீழ்த்தினார் உனாத்கத். தனது அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஷிகர் தவானை 9 ரன்னிலும், பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் அஜிங்க்யா ரஹானேவை 8 ரன்னிலும் வீழ்த்தினார் உனாத்கத். 

பவர்ப்ளேயில், பிரித்வி ஷா, தவான், ரஹானே ஆகிய மூவரையுமே ஒற்றை இலக்கத்தில் ஜெய்தேவ் உனாத்கத் வெளியேற்ற, பவர்ப்ளேயில் வெறும் 36 ரன்களை மட்டுமே அடித்து 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.

பவர்ப்ளே முடிந்த அடுத்த 7வது ஓவரை முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸை டக் அவுட்டாக்கி அனுப்ப, 37 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது டெல்லி கேபிடள்ஸ் அணி.

இதையடுத்து ரிஷப் பண்ட்டும் அறிமுக வீரர் லலித் யாதவும் இணைந்து ஆடிவருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!