#RRvsDC ராயல்ஸ், கேபிடள்ஸ் 2 அணிகளிலும் தலா 2 மாற்றங்கள்..! டெல்லி அணியில் இளம் வீரர் அறிமுகம்

By karthikeyan VFirst Published Apr 15, 2021, 7:21 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியதையடுத்து, இந்த போட்டியில் அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபாலுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனாத்கத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரபாடா இணைந்ததால், ஒரு வெளிநாட்டு வீரர் நீக்கப்பட வேண்டும். அந்தவகையில் ஷிம்ரான் ஹெட்மயர் நீக்கப்பட்டுள்ளார். ஹெட்மயர் நீக்கப்பட்டதால் ஒரு பேட்ஸ்மேன் பற்றாக்குறை ஏற்படும். அதனால் அதை ஈடுகட்டும் விதமாக உள்நாட்டு இளம் வீரரான லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஃப் ஸ்பின்னும் வீசக்கூடிய லலித் யாதவ் இந்த போட்டியில் அறிமுகமாகிறார். அவருக்கு ரிக்கி பாண்டிங் கேப் கொடுத்தார். லலித் யாதவ் சேர்க்கப்பட்டதால், சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான அமித் மிஷ்ரா நீக்கப்பட்டுள்ளார். 

மும்பை வான்கடே ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்காது என்பதால் இரு அணிகளுமே ஒரு ஸ்பின்னரை குறைத்துக்கொண்டு கூடுதலாக ஒரு ஃபாஸ்ட் பவுலருடன் ஆடுகிறது. டெல்லி அணியில் ரபாடாவும், ராஜஸ்தான் அணியில் உனாத்கத்தும்  கூடுதல் ஃபாஸ்ட் பவுலர்களாக களம் காண்கின்றனர்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், டாம் கரன், ரபாடா, ஆவேஷ் கான். 
 

click me!