RCB vs DC 7th Match: வான வேடிக்கை காட்டிய ஷஃபாலி வர்மா, ஆலீஸ் கேப்ஸி – டெல்லி 194 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Feb 29, 2024, 9:20 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது.


பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில், தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங் தேர்வு செய்தார்.

ஊக்கமருந்து விவகாரம்.. பிரபல கால்பந்தாட்ட வீரர் பால் போக்பாவிற்கு 4 ஆண்டுகள் தடை - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Tap to resize

Latest Videos

அதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் கேப்டன் மெக் லேனிங் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து ஷஃபாலி வர்மா மற்றும் அலீஸ் கேப்ஸி இருவரும் ஜோடி சேர்ந்து சரமாரியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருவரும் கொடுத்த கேட்ச் வாய்ப்பை எல்லாம் ஆர்சிபி வீராங்கனைகள் கோட்டைவிட்டனர்.

அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்த ஷஃபாலி வர்மா 31 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஷ்ரேயங்கா பாட்டீல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஜெமீமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த அலீஸ் கேப்ஸி 33 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் சேர்த்த நிலையில் நடையை கட்டினார்.

3 முறை சாம்பியன் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்ற புனேரி பல்தான்!

கடைசியாக மரிசான்னே காப் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஜெஸ் ஜோனசென் 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாச 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. பவுலிங்கை பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் ஷோஃபி டிவைன் மற்றும் நடினி டி கிளார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கெத்தாக வந்த ஹரியான ஸ்டீலர்ஸ்!

 

The many shades of Shafali Verma inside the powerplay!

The Indian opener has started off strongly for 🔥🔥

Live 💻📱https://t.co/mKFymL1O3h | pic.twitter.com/WSeniUi6t4

— Women's Premier League (WPL) (@wplt20)

 

click me!