டெல்லி அணியிலிருந்து மணீஷ் பாண்டே மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி டிரேட் முறையில் ஐபிஎல் அணிகளுக்கு இடையில் வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Rohit Sharma T20 Cricket: டி20 கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு?
இதன் காரணமாக ஐபிஎல் எணிகள் தங்களது வீரர்களை டிரேட் முறையில் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ராஜஸ்தான் அணியில் விளையாடிய தேவ்தத் படிக்கலை லக்னோ அணி டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும், லக்னோ அணியில் விளையாடிய ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணி டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டீப் ஃபேக்: போலி புகைப்படங்கள், வீடியோக்கள்: சீக்கிரம் நடவடிக்கை எடுங்க – சாரா டெண்டுல்கர் அறிக்கை!
டெல்லி, கொல்கத்தா, சென்னை அணிகளும் தங்களது வீரர்களை டிரேட் செய்ய முயன்றூ வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த மணீஷ் பாண்டே மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரையும் டிரேட் செய்து கொள்ள எந்த அணியும் முன்வராத நிலையில் இவர்கள் இருவரையும் டெல்லி கேபிடல்ஸ் விடுவிடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், டெல்லி அணி தங்களது அணியை பலப்படுத்தும் நோக்கில் வீரர்களை மாற்றியமைத்து வருகிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள், உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்களையும் தட்டி தூக்க இருப்பதாக கூறப்படுகிறது.
IPL 2024: ஐபிஎல் 2024 ஏலத்தில் உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்களை எடுக்க காத்திருக்கும் சிஎஸ்கே!