
ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், சீன் அபாட், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர், மந்தீப் சிங், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ரிப்பால் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லிகேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய மிட்செல் மார்ஷ் 10ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 16 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
9 ஓவரில் 85 ரன்களுக்கு டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். தனது பழைய அணியான சன்ரைசர்ஸுக்கு எதிராக கங்கனம் கட்டி அடித்து ஆடினார் வார்னர். அவருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல் ஆரம்பத்தில் நிதானம் காத்து பின்னர் டெத் ஓவர்களில் காட்டடி அடித்தார். வார்னர் 58 பந்தில் 92 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தாலும், அவரால் சதமடிக்க முடியவில்லை. பவல் 35 பந்தில் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களை விளாச, 20 ஓவரில் 207 ரன்களை குவித்தது.
208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 186 ரன்கள் மட்டுமே அடித்து 21 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.