SRHக்கு எதிராக கங்கனம் கட்டி காட்டடி அடித்த வார்னர்.. ரோவ்மன் பவல் அதிரடி அரைசதம்! SRHக்கு கடின இலக்கு

Published : May 05, 2022, 09:39 PM IST
SRHக்கு எதிராக கங்கனம் கட்டி காட்டடி அடித்த வார்னர்.. ரோவ்மன் பவல் அதிரடி அரைசதம்! SRHக்கு கடின இலக்கு

சுருக்கம்

சன்ரைசர்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 207 ரன்களை குவித்து 208 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், சீன் அபாட், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், மந்தீப் சிங், மிட்செல் மார்ஷ், ரிஷப்  பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ரிப்பால் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லிகேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய மிட்செல் மார்ஷ் 10ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 16 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

9 ஓவரில் 85 ரன்களுக்கு டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். தனது பழைய அணியான சன்ரைசர்ஸுக்கு எதிராக கங்கனம் கட்டி அடித்து ஆடினார் வார்னர். அவருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல் ஆரம்பத்தில் நிதானம் காத்து பின்னர் டெத் ஓவர்களில் காட்டடி அடித்தார். 

சீன் அபாட் வீசிய 17வது ஓவரில் 2 சிக்ஸர் விளாசிய பவல், உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார். வார்னர் 58 பந்தில் 92 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தாலும், அவரால் சதமடிக்க முடியவில்லை. பவல் 35 பந்தில் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களை விளாச, 20 ஓவரில் 207 ரன்களை குவித்து, சன்ரைசர்ஸுக்கு 208 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!