DC vs SRH: டாஸ் ரிப்போர்ட்.. சன்ரைசர்ஸ் அணியிலாவது 3 மாற்றங்கள்.. டெல்லி கேபிடள்ஸில் 4 மாற்றங்கள்

Published : May 05, 2022, 07:16 PM IST
DC vs SRH: டாஸ் ரிப்போர்ட்.. சன்ரைசர்ஸ் அணியிலாவது 3 மாற்றங்கள்.. டெல்லி கேபிடள்ஸில் 4 மாற்றங்கள்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. 

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை ஆடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றிகளையும், டெல்லி கேபிடள்ஸ் அணி ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றிகளையும் பெற்றுள்ள நிலையில், இந்த போட்டி பிளே ஆஃபிற்கு முன்னேற போராடும் இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ள நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் அணியில்  3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் ஆகிய இருவரும் காயத்தால் விலகியுள்ளனர். மார்கோ யான்சென் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாக், சீன் அபாட் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், சீன் அபாட், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரித்வி ஷாவுக்கு பதிலாக மந்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அக்ஸர் படேலுக்கு  பதிலாக ரிப்பால் படேலும், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் சேத்தன் சகாரியா ஆகிய இருவருக்கும் பதிலாக முறையே அன்ரிக் நோர்க்யா மற்றும் கலீல் அகமதுவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், மந்தீப் சிங், மிட்செல் மார்ஷ், ரிஷப்  பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ரிப்பால் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!