கிறிஸ் கெய்லின் அரைசத சாதனையை முறியடித்தார் டேவிட் வார்னர்

Published : May 05, 2022, 09:58 PM IST
கிறிஸ் கெய்லின் அரைசத சாதனையை முறியடித்தார் டேவிட் வார்னர்

சுருக்கம்

டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்துள்ளார் டேவிட் வார்னர்.  

டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களாகவும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகவும் சில வீரர்கள் தான் திகழ்கின்றனர். அவர்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான் அதிகம்.

பொல்லார்டு, பிராவோ, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகியோர் சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் உட்பட பல டி20 லீக் தொடர்களில் ஆடியதன் விளைவாக அதிக டி20 போட்டிகளில் ஆடியதுடன் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர்.

பேட்டிங் ரெக்கார்டு பெரும்பாலும் கெய்ல் தான் வைத்துள்ளார். அந்தவகையில் டி20 கிரிக்கெட்டில்(சர்வதேச டி20 மற்றும் டி20 லீக் தொடர்கள்) 88 அரைசதங்களை விளாசிய கெய்ல் தான் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரராக திகழ்ந்தார். இவரை டேவிட் வார்னர் சமன் செய்திருந்த நிலையில், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸூக்கு எதிராக அரைசதம் அடித்து கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார்.

தனது பழைய அணியான சன்ரைசர்ஸுக்கு எதிராக டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடிய வார்னர் அடித்து ஆடி 58பந்தில் 92 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். இது டி20 கிரிக்கெட்டில் வார்னரின் 89வது அரைசதம். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!