காயத்தால் விலகிய மற்றொரு வீரர்.. கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இணையும் இளம் வீரர்

By karthikeyan VFirst Published Dec 19, 2019, 6:05 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக தவான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் விலகியதை அடுத்து, தற்போது கடைசி போட்டியிலிருந்து மற்றொரு வீரரும் காயத்தால் விலகியுள்ளார். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது இந்திய அணி. 

கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. தொடரை தீர்மானிக்கும் அந்த போட்டி, மிக முக்கியமானது என்பதால் இரு அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், இரண்டாவது போட்டியின் போது, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹருக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை கடைசி போட்டியில் ஆடவைப்பது ரிஸ்க் என்பதால், கடைசி போட்டிக்கான அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக இளம் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தவான், புவனேஷ்வர் குமார் ஆகியோரை தொடர்ந்து தீபக் சாஹரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அணியிலிருந்து விலகியுள்ளார்.

தீபக் சாஹருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள நவ்தீப் சைனி, அவருக்கு நிகரான தரமான பவுலர். அசால்ட்டாக 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய சிறந்த ஃபாஸ்ட் பவுலர். ஏற்கனவே இந்திய அணியில் தனது திறமையை நிரூபித்த பவுலரும் கூட. 

click me!