T20 World Cup தொடரின் நாயகனையே தனது பெஸ்ட் லெவனில் தேர்வு செய்யாத முன்னாள் இந்திய வீரர்..! அதிர்ச்சி தேர்வு

Published : Nov 16, 2021, 04:48 PM IST
T20 World Cup தொடரின் நாயகனையே தனது பெஸ்ட் லெவனில் தேர்வு செய்யாத முன்னாள் இந்திய வீரர்..! அதிர்ச்சி தேர்வு

சுருக்கம்

தீப்தாஸ் குப்தா டி20 உலக கோப்பையின் (T20 World Cup) சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.  

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய எந்த அணியும் கோப்பையை வெல்லவில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளாவது அரையிறுதிக்கு சென்றன. ஆனால் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறி ஏமாற்றமளித்தன.

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் அடைந்த படுதோல்விகளின் காரணமாக, அடுத்த 3 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.

இந்த டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் தீப்தாஸ் குப்தாவும் தனது சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

பெரும்பாலானோர் டேவிட் வார்னர் - ஜோஸ் பட்லர் அல்லது ஜோஸ் பட்லர் - பாபர் அசாம் என்ற தொடக்க ஜோடியையே தேர்வு செய்தனர். ஆனால் தீப்தாஸ் குப்தா, ஐசியூவில் இருந்து வந்து உயிரை பணயம் வைத்து பாகிஸ்தானுக்காக அரையிறுதியில் ஆடிய முகமது ரிஸ்வானையும், அவரது ஓபனிங் பார்ட்னரும் இந்த தொடரில் அதிக ரன்களை (303 ரன்கள்) குவித்தவருமான பாபர் அசாமையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.

3ம் வரிசையில் ஜோஸ் பட்லரையும், 4ம் வரிசையில் இலங்கையின் சாரித் அசலங்காவையும் தேர்வு செய்த தீப்தாஸ் குப்தா, ஆல்ரவுண்டர்களாக மொயின் அலி, நமீபியாவின் டேவிட் வீஸ், இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். இந்த தொடரில் மிக அபாரமாக பந்துவீசி ஆஃப்கான் அணிக்காக தனது பணியை வழக்கம்போலவே செவ்வனே செய்த ரஷீத் கானை ஸ்பின்னராகவும், அன்ரிக் நோர்க்யா மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாகவும் தேர்வு செய்துள்ளார்.

டி20 உலக கோப்பையில் 289 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இந்த தொடரின் நாயகன் டேவிட் வார்னரையும், ஆஸ்திரேலிய அணிக்கு பவுலிங்கில் முக்கிய பங்காற்றிய ஹேசில்வுட் ஆகிய இருவரையும் தீப்தாஸ் குப்தா புறக்கணித்துள்ளார்.

தீப்தாஸ் குப்தா தேர்வு செய்த டி20 உலக கோப்பை சிறந்த லெவன்:

முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஜோஸ் பட்லர், சாரித் அசலங்கா, மொயின் அலி, டேவிட் வீஸ், வனிந்து ஹசரங்கா, ரஷீத் கான், அன்ரிக் நோர்க்யா, டிரெண்ட் போல்ட்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!