கோலி vs ஸ்மித் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்..? வார்னரின் சுவாரஸ்யமான பதில்

By karthikeyan VFirst Published Jun 22, 2020, 11:05 PM IST
Highlights

கோலி - ஸ்மித் இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு வார்னர் பதிலளித்துள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் ஸ்டீவ் ஸ்மித்தும் திகழும் நிலையில், அவர்களில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.

ஆனாலும் இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். இந்த போட்டியில், ஸ்மித்தை விட எப்போதுமே கோலி தான் முன்னிலை பெறுகிறார்.

இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் ஆடவுள்ள நிலையில், இந்தியா டுடேவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வார்னரிடம் இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்வி டேவிட் வார்னரிடமும் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வார்னர், கோலி - ஸ்மித் இருவருமே மூன்றுவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடும் உலகில் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஆஸ்திரேலியா - இந்தியா தொடரில் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று பொதுவான பார்வை ஒன்று உள்ளது.

ஆனால் எங்களை பொறுத்தமட்டில், போட்டி என்பது ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும். அதனால் பவுலருக்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையேதான் போட்டியே தவிர, பேட்ஸ்மேன்களுக்கு இடையே அல்ல. போட்டி பேட்டுக்கும் பந்துக்கும் தான் என்றார்.

click me!