ஐபிஎல்லில் ரோஹித்துக்கு அடுத்த 2வது வீரர் வார்னர்..! தரமான சாதனை.. பரிதாப பஞ்சாப்

Published : Apr 21, 2022, 03:11 PM IST
ஐபிஎல்லில் ரோஹித்துக்கு அடுத்த 2வது வீரர் வார்னர்..! தரமான சாதனை.. பரிதாப பஞ்சாப்

சுருக்கம்

ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.  

ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். 2009லிருந்து ஐபிஎல்லில் ஆடிவரும் டேவிட் வார்னர் 154 போட்டிகளில் ஆடி 5640 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் அணிக்கு 2016ல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.

இந்த சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக வார்னரை சன்ரைசர்ஸ் அணி விடுவித்ததையடுத்து, அவரை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடிவரும் டேவிட் வார்னர், அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார்.

ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் விராட் கோலி, ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த 4வது வீரராக திகழ்கிறார் டேவிட் வார்னர். 

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 30 பந்தில் 60 ரன்களை குவித்து 11வது ஓவரிலேயே டெல்லி அணி வெற்றி பெற உதவினார். நேற்று அடித்த ஸ்கோருடன் சேர்த்து, டேவிட் வார்னர், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டார்.

இதன்மூலம், ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர். கேகேஆருக்கு எதிராக ஐபிஎல்லில் ரோஹித் சர்மா 1018 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!
IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!