எத்தனையோ கேட்ச் பார்த்துருப்பீங்க.. ஆனால் இது வேற லெவல் கேட்ச்.. மில்லர் மிரட்டலான ஃபீல்டர்.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 24, 2020, 5:52 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டுப்ளெசிஸும் மில்லரும் இணைந்து அருமையான கேட்ச்சை பிடித்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. 
 

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணீ வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. 

போர்ட் எலிசபெத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, கேப்டன் குயிண்டன் டி காக்கின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவரில் 158 ரன்களை குவித்தது. டி காக் 47 பந்தில் 70 ரன்களை குவித்தார். 

159 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் வார்னர் கடைசி வரை களத்தில் நின்றபோதிலும், மறுமுனையில் அவருக்கு யாருமே ஒத்துழைப்பு கொடுக்காததால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வார்னர் 67 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. 

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழிதீர்த்து கொண்டது தென்னாப்பிரிக்க அணி. 

இந்த போட்டியில் மிட்செல் மார்ஷின் கேட்ச்சை டுப்ளெசிஸும் மில்லரும் இணைந்து பிடித்தனர். ஆனால் இந்த மொத்த கிரெடிட்டும் மில்லரையே சாரும். மிட்செல் மார்ஷ் ஸ்டிரைட் திசையில் தூக்கியடித்த பந்தை, லாங் ஆன் ஃபீல்டர் டுப்ளெசிஸ் மற்றும் லாங் ஆஃப் ஃபீல்டர் டேவிட் மில்லர் ஆகிய இருவருமே விரட்டிவந்தனர். அந்த பந்து லாங் ஆன் திசையை ஓட்டி வந்ததால், மில்லரை முந்தி டுப்ளெசிஸ் அந்த பந்தை ரீச் செய்தார். 

Also Read - சாதித்த நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள்.. மரண அடி வாங்கிய இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள்.. இதுதான் காரணம்

அதிவேகமாக ஓடிவந்து அந்த பந்தை பிடித்தார் டுப்ளெசிஸ். அவர் மில்லரிடம் தூக்கிப்போட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அவர் பவுண்டரி லைனை மிதிக்கும் முன்பாக ரன் வேகத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். அந்தளவிற்கு பவுண்டரி லைனுக்கும் அவர் கேட்ச் பிடித்ததற்கும் இடையே இடைவெளி இருந்தது. ஆனால் மில்லர் எதிர் திசையில் ஓடிவந்ததால், ரிஸ்க் எடுக்க விரும்பாத டுப்ளெசிஸ், தான் பவுண்டரி லைனை மிதித்துவிட்டாலும், அந்த கேட்ச்சை உறுதிப்படுத்தும் விதமாக திடீரென பந்தை மில்லரிடம் தூக்கிப்போட்டார். ஓடிவந்துகொண்டிருந்த மில்லர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் டுப்ளெசிஸ் வேகமாக தூக்கியெறிந்த பந்தை கவனக்குவிப்புடன் அபாரமாக பிடித்தார். அந்த வீடியோ இதோ.... 
 

Wowee! What a catch! pic.twitter.com/3UPDKpNZuU

— Trishan Naidoo (@trishannai)
click me!