டி20 உலக கோப்பையை வெல்ல சாமுவேல்ஸை கொம்பு சீவி விட்டதே ஸ்டோக்ஸ் தான்..! வாயால் கெட்ட சம்பவம்

Published : Jun 08, 2020, 10:07 PM IST
டி20 உலக கோப்பையை வெல்ல சாமுவேல்ஸை கொம்பு சீவி விட்டதே ஸ்டோக்ஸ் தான்..! வாயால் கெட்ட சம்பவம்

சுருக்கம்

2016 டி20 உலக கோப்பை இறுதி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸை ஸ்டோக்ஸ் கொம்புசீவிவிட்ட சம்பவம் குறித்து டேரன் சமி பகிர்ந்துள்ளார்.   

2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி வரை கடுமையாக போராடி இங்கிலாந்துக்கு முதல் முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்து, வரலாற்றில் இடம்பிடித்தவர் பென் ஸ்டோக்ஸ். அதன்பின்னர் ஆஷஸ் தொடரின் ஒரு போட்டியிலும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இன்னிங்ஸை ஆடி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

2019 உலக கோப்பையை வென்று கொடுத்ததற்கு 3 ஆண்டுகளுக்கு முன், டி20 உலக கோப்பை இறுதி போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4  சிக்ஸர்களை கொடுத்தார் ஸ்டோக்ஸ். பிராத்வெயிட் 4 சிக்ஸர்களை விளாசி வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றியையும் டி20 உலக கோப்பையையும் வென்று கொடுத்தார். 

அந்த இறுதி போட்டியில், ரேரன் சமி 85 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவரது அந்த சிறப்பான இன்னிங்ஸின் பின்னணி குறித்து, அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி பேசியுள்ளார். 

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த அந்த இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 155 ரன்கள் அடித்தது. 156 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 11 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால், மார்லன் சாமுவேல்ஸ் அதிரடியாக ஆடி 85 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

அதுகுறித்து பேசியுள்ள டேரன் சமி, சாமுவேல்ஸ் களத்திற்கு வரும்போது, இந்த ஓவரை தாண்டுவாயா எனும் ரீதியாக ஸ்டோக்ஸ் வம்பிழுத்திருக்கிறார். அதையே ஊக்கமாக எடுத்துக்கொண்டு, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில்வைத்து, களத்தில் நிலைக்க தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு மிகக்கவனமாகவும் அருமையாக ஆடினார் சாமுவேல்ஸ். ஸ்டோக்ஸ் தன்னை வம்பிழுத்தது குறித்து சாமுவேல்ஸே தன்னிடம் கூறியதாக சமி தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!
T20 தரவரிசை.. டாப் 5-க்குள் சென்ற திலக் வர்மா.. பவுலிங், பேட்டிங்கில் இந்தியர்கள் நம்பர் 1