U19-ல இருந்து அந்த பையனை பார்த்துட்டு இருக்கேன்.. பக்கா டெஸ்ட் பிளேயர்..! டேனிஷ் கனேரியாவின் சர்ப்ரைஸ் தேர்வு

By karthikeyan VFirst Published Dec 7, 2021, 8:03 PM IST
Highlights

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பக்கா டெஸ்ட் பேட்ஸ்மேன் என்றும், அதனால் அவரை இந்திய டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்றும் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.
 

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில், இந்திய அணி சீனியர் வீரர்களை கடந்து இளம் வீரர்களை பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. புஜாரா, ரஹானே ஆகிய சீனியர் வீரர்கள் அண்மைக்காலமாக பெரிய ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவரும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் அணிக்குள் நுழந்துள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக தொடரில் சிறப்பாக ஆடினார்.

சூர்யகுமார் யாதவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு அப்பாற்பட்ட ஷுப்மன் கில், பிரித்வி ஷா என வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். 

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியிலேயே ரஹானேவிற்கு மாற்றாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சீனியர் வீரர்களுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்நிலையில், யாருமே எதிர்பார்த்திராத ஒரு  இளம் வீரரை இந்திய டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியிருக்கிறார்.

அண்டர் 19 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு பக்கா டெஸ்ட் கிரிக்கெட்டர் என்றும், அவரை டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்றும் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த தொடரிலேயே ஜெய்ஸ்வாலை எடுக்க வேண்டும் என்கிற வகையில், இந்த கருத்தை கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா. 

இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, சூர்யகுமார் யாதவ் பென்ச்சில் இருக்கிறார். ஆனால் இப்போதைய சூழலில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பற்றி விவாதிப்பதில் தவறில்லை. அண்டர் 19 பிராடக்ட் அவர். ஐபிஎல்லிலும் நன்றாக ஆடியிருக்கிறார். ஆனால் அவரை நான் ஒரு முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டராக பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் தான் ஜெய்ஸ்வாலுக்கான ஃபார்மட்.  அண்டர் 19 நாட்களிலிருந்தே நான் அவர் எப்படி பேட்டிங் ஆடுகிறார் என்பதை பார்த்துவருகிறேன். அதனால்தான் சொல்கிறேன்.. ஜெய்ஸ்வால் கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியான வீரராக இருப்பார் என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.
 

click me!