GT vs RR: முதல் தகுதிப்போட்டியில் எந்த அணி ஜெயிக்கும்..? ரவி சாஸ்திரி, வெட்டோரி ஒரே மாதிரியான கணிப்பு

By karthikeyan VFirst Published May 24, 2022, 2:43 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிப்போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறியுள்ளனர்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின.

புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும் என்பதால், இரு அணிகளுமே வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்பில் தான் களமிறங்கும். ஆனால் தோற்கும் அணிக்கு ஃபைனலுக்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டியில் தோற்கும் அணி, எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன் 2வது தகுதிப்போட்டியில் மோதும். அதில் ஜெயித்தால் ஃபைனலுக்கு முன்னேறலாம்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுமே இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடிவரும் நிலையில், வலுவான 2 அணிகள் மோதும் போட்டி என்பதால் இந்த போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும்.

இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் ரவி சாஸ்திரி மற்றும் டேனியல் வெட்டோரி ஆகிய இருவரும் கருத்து கூறியுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத்தை விட அனுபவம் வாய்ந்த சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால் ராஜஸ்தான் அணி தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக இருவருமே கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து கூறிய டேனியல் வெட்டோரி, அஷ்வின் - சாஹல் காம்பினேஷன் எனக்கு மிகவும் பிடித்த காம்போ. அஷ்வின் - சாஹல் ஜோடி மிடில் ஆர்டரில் ராஜஸ்தான் அணிக்கு ஸ்பெஷலாக இருக்கும். டிரெண்ட் போல்ட்டை மறந்துவிடக்கூடாது. எனவே ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று டேனியல் வெட்டோரி தெரிவித்தார்.

அனுபவத்தின் அடிப்படையிலும், அனுபவம் வாய்ந்த பவுலிங் யூனிட்டை பெற்றதன் அடிப்படையிலும், ராஜஸ்தான் அணிக்கான வெற்றி வாய்ப்புதான் அதிகம் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 

click me!