#CSKvsMI பொல்லார்டு செய்த ஒரு சிறிய தவறால் மேட்ச்சே போச்சு.. டேல் ஸ்டெய்ன் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 20, 2021, 5:32 PM IST
Highlights

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு செய்த சிறிய தவறுதான் காரணம் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாகம் நேற்று மீண்டும் தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர்கள் டுப்ளெசிஸ், ரெய்னா, மொயின் அலி, தோனி ஆகிய 4 சீனியர் வீரர்களும், அணியின் ஸ்கோர் 24 ரன்களாக இருக்கும்போதே ஆட்டமிழந்துவிட்டனர். அம்பாதி ராயுடுவும் ரன்னே அடிக்காமல் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிவிட்டார்.

24 ரன்களுக்குள்ளாக 5 பேரை இழந்துவிட்ட சிஎஸ்கே அணி, ருதுராஜ் கெய்க்வாட்டின் பொறுப்பான அரைசதத்தால்(88) 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 136 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸை சுருட்டி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள டேல் ஸ்டெய்ன், மும்பை இந்தியன்ஸ் அணி சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. அரைசதம் அடித்த சவுரப் திவாரியாலும் டெத் ஓவர்களில் பெரிய ஷாட்களை ஆடமுடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் 120 பந்தில் 150 ரன்கள் எல்லாம் எளிதாக அடிக்க வேண்டியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸ் விசித்திரமாக இருந்தது. சிஎஸ்கே அணியின் கேப்டன்சி மற்றும் பவுலிங் இரண்டுமே புத்திசாலித்தனமாக இருந்தன.

பொல்லார்டு ஒரு சிறிய தவறிழைத்துவிட்டார். சிஎஸ்கே அணி ஆரம்பத்தில் விரைவில் விக்கெட்டுகளை இழந்தநிலையில், ஃபாஸ்ட் பவுலர்களை வைத்து அட்டாக் செய்யாமல், ஸ்பின்னர்களை வீசவைத்து சிஎஸ்கே வீரர்களை செட்டில் ஆக விட்டு, முமெண்ட்டத்தை இழக்கவைத்து விட்டார். அதேவேளையில், தோனி புத்திசாலித்தனமாக கேப்டன்சி செய்தார். அவரது ஃபாஸ்ட் பவுலர்களை சிறப்பாக பயன்படுத்தினார் என்று டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
 

click me!