ஷிவம் துபேக்கு பதிலாக வந்த ராயுடு: டாஸ் வென்ற சென்னை பேட்டிங்: சாதனை படைக்குமா டெல்லி?

By Rsiva kumar  |  First Published May 10, 2023, 7:19 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
 


ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு போராடி வருகின்றன. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் 10 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் இருக்கும் டெல்லிக்கும், 4ஆவது இடத்தில் இருக்கும் லக்னோவுக்கும் 3 புள்ளிகள் தான் வித்தியாசம். 

ODI World Cup: முதல் போட்டியில் Ind vs Aus அதுவும் சென்னைல தான்; அக்டோபர் 15ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

Latest Videos

இதனால் இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னை அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுமட்டுமின்றி கடைசியாக நடந்த ஒரு சில போட்டிகளை வைத்து பார்க்கும் போது சொந்த மண்ணில் விளையாடும் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சென்னையை அணியைப் பொறுத்தவரையில் ஷிவம் துபேவிற்குப் பதிலாக அம்பத்தி ராயுடு களமிறக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியிலும் பென் ஸ்டோக்ஸூம் இடம் பெறவில்லை.

ஆஸ்கர் ஹீரோக்களை சந்தித்த தோனி: நம்பர் 7 ஜெர்சியை கொடுத்து கௌரவப்படுத்திய சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருத்துராஜ் கெய்வாட், டெவான் கான்வே, அஜிங்கியா ரஹானே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா

டெல்லி கேபிடல்ஸ்:

டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலே ரோஸோவ், அக்‌ஷர் படேல், அமன் ஹகிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ்க் உமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது: டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி - கேஎல் ராகுல்!

இதற்கு முன்னதாக, சென்னையில் நடந்த போட்டியில் சென்னையும், கொல்கத்தாவில் நடந்த போட்டியில் கொல்கத்தாவும், மும்பையில் நடந்த போட்டியில் மும்பையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதுவரையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் 27 போட்டிகளில் மோதியுள்ளன.  இதில் 17 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 10 முறை டெல்லி கேபிடல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 8 போட்டிகளில் 6ல் சிஎஸ்கே அணியும், 2ல் டெல்லி கேபிடல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

Sweet Mango's: விராட் கோலியை வம்புக்கு இழுக்கும் நவீன் உல் ஹாக், கவுதம் காம்பீர்!

கடைசியாக நடந்த 5 போட்டிகளில் 2ல் சிஎஸ்கேயும், 3ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டியில் சிஎஸ்கே தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த 5 போட்டிகளில் 3ல் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Massive roar for Thala Dhoni. pic.twitter.com/fgezFNi27l

— Johns. (@CricCrazyJohns)

 

click me!