IPL 2023: CSK vs MI டாஸ் ரிப்போர்ட்! MI அணியில் அதிரடி மாற்றங்கள்! மேட்ச் வின்னருக்கு காயம்; MI-க்கு பின்னடைவு

By karthikeyan V  |  First Published May 6, 2023, 3:31 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. இதுவரை தலா 5 வெற்றிகளை பெற்றுள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள சிஎஸ்கே, 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி முக்கியம். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது இடத்திற்கு முன்னேறும். 

Latest Videos

ஐபிஎல்லில் பரம எதிரி அணிகளான சமபலம் வாய்ந்த சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் இந்த சீசனின் முக்கியமான போட்டியில் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

IPL 2023: DC vs RCB மோதல்.. ஆர்சிபி அணியில் 38 வயது வீரருக்கு கம்பேக் சான்ஸ்.! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழும் சிறந்த பேட்ஸ்மேனான திலக் வர்மா காயத்தால் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக டிரிஸ்டான் ஸ்டப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். குமார் கார்த்திகேயாவிற்கு பதிலாக ராகவ் கோயல் என்ற வீரர் அறிமுகமாகிறார். மும்பை அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலுசேர்த்துவந்த திலக் வர்மா ஆடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா.

IPL 2023: இந்த லெட்சணத்துல பேட்டிங் ஆடுனா எப்படி ஜெயிக்கிறது? SRH பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய பிரயன் லாரா

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நெஹல் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷ்த் கான்.
 

click me!