CSK vs GT: சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் அறிமுகம்..மொத்தம் 4 மாற்றங்கள்..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published May 15, 2022, 3:20 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 

ஐபிஎல் 15வது சீசனின் இன்று பிற்பகல் மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால், இதுவரை ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பரிசோதிக்க இது நல்ல வாய்ப்பு என்றவகையில் சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் அறிமுகமாகின்றனர்.

இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராபின் உத்தப்பா, ராயுடு, பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு, ஜெகதீசன், பிரசாந்த் சோலங்கி, மிட்செல் சாண்ட்னெர், மதீஷா பதிரனா ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சோலங்கி மற்றும் பதிரனா ஆகிய இருவரும் சிஎஸ்கே அணியில் அறிமுகமாகின்றனர். இலங்கையை சேர்ந்த பதிரனா, இலங்கை முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்‌ஷனை கொண்டவர்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, ஷிவம் துபே, ஜெகதீசன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரானா, முகேஷ் சௌத்ரி.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அருமையாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் அந்த அணியில் மாற்றம் செய்வதற்கான அவசியமும் இல்லை. அந்தவகையில், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸார் ஜோசஃப், யஷ் தயால், முகமது ஷமி.
 

click me!