சர்ச்சைகளின் நாயகன் சைமண்ட்ஸ்..! ஆண்ட்ரூ சைமண்ட்ஸும் இருபெரும் சர்ச்சைகளும்

By karthikeyan VFirst Published May 15, 2022, 2:58 PM IST
Highlights

ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் தொடர்பான இருபெரும் சர்ச்சைகளை பார்ப்போம்.
 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. 

1998ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய 26 டெஸ்ட் மற்றும் 198 ஒருநாள் போட்டிகளில் ஆடி சுமார் 6500 ரன்களை குவித்துள்ளார். 

தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சைமண்ட்ஸ், கடும் சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சைமண்ட்ஸ், அதன்பின்னர் ஃபார்மை இழந்து மதிப்பை இழந்து கிரிக்கெட்டிலிருந்து விலகினார்.

அவரது கிரிக்கெட் கெரியரில் அவர் தொடர்பான 2 பெரும் சர்ச்சைகளை பார்ப்போம்.

1. மங்கிகேட் சர்ச்சை:

அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 2007-08ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட்டில் சைமண்ட்ஸுடனான மோதலின்போது, அவரை குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதாக சைமண்ட்ஸ் சர்ச்சையை கிளப்பினார். சைமண்ட்ஸின் குற்றச்சாட்டை பாண்டிங், கில்கிறிஸ்ட், ஹைடன் மற்றும் கிளார்க் ஆகிய நால்வரும் வழிமொழிந்து சாட்சி சொன்னார்கள். 

ஆனால் இந்த விவகாரம் ஹர்பஜன் சிங்கை பெரிதாக பாதிக்கவில்லை. மாறாக சைமண்ட்ஸின் கெரியரையே இச்சம்பவம் முடித்துவைத்தது. தன்னை குரங்கு குரங்கு என்று திட்டியே தனது கெரியரை ஹர்பஜன் முடித்துவைத்து விட்டதாக சைமண்ட்ஸே குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் ஆஸி., கிரிக்கெட் வாரியம் தனக்கு துணையாக நிற்கவில்லை என்ற அதிருப்தி சைமண்ட்ஸுக்கு இருந்தது. இச்சம்பவத்திற்கு பின்னர் ஃபார்மை இழந்து கிரிக்கெட்டை விட்டு விலகினார் சைமண்ட்ஸ்.

2. குடிப்பழக்கம்

ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மதுப்பழக்கம் அவரது கிரிக்கெட் கெரியருக்கு எமனாக அமைந்தது. 2005ம் ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் கடுமையாக குடித்து போதையான சைமண்ட்ஸ், அடுத்த நாளும் போதையிலேயே இருந்தார். போதை தெளியாதபோதிலும், அந்த போட்டியில் ஆட முயன்றார் சைமண்ட்ஸ். ஆனால் ஆஸி., அணி அனுமதிக்கவில்லை. பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என்பது ஆஸி., கிரிக்கெட் வாரிய விதி. ஆனால் பலமுறை பொது இடங்களில் மது அருந்தி சிக்கினார். 2008ல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு முன் நடந்த அணி மீட்டிங்கில் கலந்துகொள்ளாமல் மீன்பிடிக்க சென்ற சைமண்ட்ஸை அந்த அணியும், கிரிக்கெட் வாரியமும் அதன்பின்னர் கண்டுகொள்ளவில்லை. அத்துடன் அவரது கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்தது.

குடிப்பழக்கம் அதிகமுள்ள சைமண்ட்ஸ், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாரா என்று விசாரணை நடந்துவருகிறது.
 

click me!