MI-யிடம் 97 ரன்களுக்கு சுருண்ட சிஎஸ்கே..! யுவராஜ் - ரெய்னா கிண்டல்.. வைரல் வீடியோ

Published : May 13, 2022, 09:51 PM IST
MI-யிடம் 97 ரன்களுக்கு சுருண்ட சிஎஸ்கே..! யுவராஜ் - ரெய்னா கிண்டல்.. வைரல் வீடியோ

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வெறும் 97 ரன்கள் மட்டுமே அடித்த சிஎஸ்கே அணியை சுரேஷ் ரெய்னாவிடம் கிண்டலடித்தார் யுவராஜ் சிங்.  

ஐபிஎல் 15வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி, முதலில் பேட்டிங் ஆடி வெறும் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங்கால் வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் தோனி அதிகபட்சமாக 36 ரன்கள் அடித்தார். அவரது அந்த பங்களிப்பால் தான் சிஎஸ்கே அணி 97 ரன்களையாவது எட்டியது. அந்த இலக்கை 15வது ஓவரில் அடித்து மும்பை அணி வெற்றி பெற்றது. அதனால் சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இந்த போட்டி நடந்துகொண்டிருந்த போது, முன்னாள் சிஎஸ்கே மேட்ச் வின்னரான ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் சேர்ந்து உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றை நேரில் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அப்போது, சிஎஸ்கே அணி 97 ரன்களுக்கு சுருண்டதை அறிந்த யுவராஜ் சிங், முன்னாள் சிஎஸ்கே வீரரான ரெய்னாவிடம், உங்கள் அணி 97 ரன்களுக்கே சுருண்டுவிட்டதே... நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ரெய்னா, நான் தான் ஆடவில்லையே.. நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்றார். யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!
IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!