வரும் மே 4 ஆம் தேதி நடக்க இருந்த சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. நேற்று பெங்களூருவில் நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலையில் தொடங்கப்பட்டது.
IPL 2023: ஐபிஎல் டிக்கெட்டுகள் பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு? விளக்கமளித்த சிஎஸ்கே நிர்வாகம்!
இந்தப் போட்டியைத் தொடர்ந்து 23 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 27 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. 30 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பிறகு 4ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையிலான 46ஆவது போட்டி நடக்க இருந்தது. இந்தப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருந்தது.
IPL 2023: ஹாட்ரிக் வெற்றிக்கு போட்டி போடும் மும்பை - ஹைதராபாத் மோதல்; உத்தேச ஆடும் 11!
ஆனால், மே 4ல் லக்னோ மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறுவதால், போட்டியை 3ஆம் தேதிக்கு ஐபிஎல் கமிட்டி மாற்றி அமைத்துள்ளது. அதன்படி இந்தப் போட்டி மே 3 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே அன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: சிஎஸ்கே போட்டிக்கு கேப்டன் மில்லர் கெட்டப்பில் வந்திருந்த தனுஷ்; வைரலாகும் புகைப்படம்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.