நேற்று சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டியில் சுனில் கவாஸ்கரது சட்டையில் தோனி ஆட்டோகிராஃப் போட்ட அற்புதமான நிகழ்வு நடந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை நெருங்கிவிட்டது. சென்னையின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கடைசி லீக் போட்டி நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தார். அதன்படி, முதலில் ஆடிய சென்னை அணி ரொம்பவே குறைவான ஸ்கோர் எடுத்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். இதில் இருவருமே அரைசதம் அடித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியாக கொல்கத்தா 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSKஐவிட RCBக்காக முதல் வீரராக 600 ரன்கள் குவித்த ஃபாப் டூப்ளெசிஸ்!
சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி என்பதால், சென்னை அணியின் வீரர்கள் மைதானம் முழுவதும் வலம் வந்தனர். மேலும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதோடு, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கருக்கு அவரது சட்டையில் ஆட்டோகிராஃப் போட்டுள்ளார். ரசிகர்களுக்கு டென்னிஸ் பந்து மற்றும் ஜெர்சியும் அன்பு பரிசாகவும் கொடுத்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மார்க்ஷீட்டை வெளியிட்ட ஷஃபாலி வர்மா!