அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தோனியை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு (தோனியின் அம்மா தேவகி ஜி) வாழ்த்துக்கள் அம்மா என்று சிஎஸ்கே ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சினிமா. கிரிக்கெட், மகன்கள் என்று எல்லோருமே அன்னையர் தினத்தில் தங்களது அம்மாக்களை கொண்டாடி மகிழந்தனர். அம்மாவிற்கு பரிசுகள் வாங்கிக் கொடுத்தும் அவருக்கு பிடித்துமானவற்றை செய்து கொடுத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
சென்னையில் வெற்றிக் கொடியை பறக்கவிட்ட நிதிஷ் ராணா - ரிங்கு கூட்டணி; பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா?
அன்னையர் தினத்தன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழந்து 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSKஐவிட RCBக்காக முதல் வீரராக 600 ரன்கள் குவித்த ஃபாப் டூப்ளெசிஸ்!
இந்தப் போட்டியின் போது, சிஎஸ்கே ரசிகர்கள் தோனியின் அம்மா தேவகி ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அன்னையர் தினத்தை முன்னிட்டு ஷாட்டில் நீங்கள் எங்களுக்கு எம்எஸ் தோனியைக் கொடுத்தீர்கள். உங்களுக்கு தேவகி ஜி நன்றி. அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த யுகத்தில் எப்போதும் ஈடு செய்ய முடியாதது அம்மா என்பது போன்று சச்சின் டெண்டுல்கர் தனது அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் கடைசி மேட்ச்: முதல் அணியாக பிளே ஆஃப் செல்லுமா சென்னை?
Chepauk crowd thanking the mother of MS Dhoni.
This is beautiful. pic.twitter.com/Kvg5eSNghy