IPL 2021 டுப்ளெசிஸ் காட்டடி.. ருதுராஜ், உத்தப்பா, மொயின் அலியின் அதிரடியால் KKRக்கு கடின இலக்கை நிர்ணயித்த CSK

By karthikeyan VFirst Published Oct 15, 2021, 9:27 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் டைட்டிலை வெல்ல கேகேஆருக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே அணி.
 

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் சிஎஸ்கேவும் கேகேஆரும் ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும் இறுதி போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளுமே ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யாமல் கடந்த போட்டிகளில் ஆடிய அதே காம்பினேஷனுடன் ஆடிவருகிறது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், டுளெசிஸும் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவர்ப்ளேயில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அருமையாக ஆடினர். 

ருதுராஜும் டுப்ளெசிஸும் இணைந்து 8 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். இரண்டரை நிமிட பிரேக் முடிந்து வந்ததும், முதல் ஓவரிலேயே ருதுராஜ் 32 ரன்களுக்கு சுனில் நரைனின் பந்தில் ஆட்டமிழந்தார்.  ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தாலும், டுப்ளெசிஸும் உத்தப்பாவும் இணைந்து அருமையாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 63 ரன்களை குவித்தனர்.

அதிரடியாக அடித்து ஆடி சிக்ஸர்களாக விளாசிய உத்தப்பா 15 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்களை விளாச, அதன்பின்னர் டுப்ளெசிஸுடன் ஜோடிசேர்ந்த மொயின் அலியும் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். மொயின் அலி 20 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாச, ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய டுப்ளெசிஸ் 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

டுப்ளெசிஸின் காட்டடி பேட்டிங், மொயின் அலி மற்றும் உத்தப்பாவின் அதிரடி கேமியோ பங்களிப்பால் 20 ஓவரில் 192 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 193ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!