CSK vs GT: சிஎஸ்கேவை குறைவான ரன்களுக்கு கட்டுப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ்..! GTக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published May 15, 2022, 5:41 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 133 ரன்கள் மட்டுமே அடித்து, 134 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத் டைட்டன்ஸூக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, ஷிவம் துபே, ஜெகதீசன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரானா, முகேஷ் சௌத்ரி.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸார் ஜோசஃப், யஷ் தயால், முகமது ஷமி.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய மொயின் அலி நன்றாக தொடங்கிய நிலையில், அவரும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் நிலைத்து ஆடினார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெகதீசனும் நன்றாக ஆடினார். அரைசதம் அடித்த ருதுராஜ், 16வது ஓவரில் அதிரடியாக ஆட ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அடித்து ஆட முயற்சி செய்தபோது ஆட்டமிழந்தார்.49 பந்தில் 53 ரன்கள் அடித்தார் ருதுராஜ்.

அதன்பின்னர் டெத் ஓவர்களிலும் ஷிவம்துபே, தோனி ஆகிய யாரையுமே அடித்து ஆட அனுமதிக்கவில்லை குஜராத் பவுலர்கள். கடைசி வரை களத்தில் நின்ற ஜெகதீசன், 33 பந்தில் 39 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 133 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 134 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் பவுலர்கள் வழக்கம்போலவே அருமையாக பந்துவீசி, சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை எந்த சூழலிலும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் கட்டுக்குள்ளேயே வைத்து 133 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.
 

click me!