டெஸ்ட் மாதிரி விளையாடும் சிஎஸ்கே; வர்றாங்க, போறாங்க; ஒரு சிக்ஸர் கூட இல்ல!

Published : May 10, 2023, 08:42 PM IST
டெஸ்ட் மாதிரி விளையாடும் சிஎஸ்கே; வர்றாங்க, போறாங்க; ஒரு சிக்ஸர் கூட இல்ல!

சுருக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் 10 ஓவர்கள் வரையில் எந்த வீரரும் சிக்ஸர் அடிக்கவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு போராடி வருகின்றன. தற்போது நடந்து வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் கூட கடைசி இடத்தில் 8 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எஞ்சிய 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டும். ஆனால், ஒரிரு போட்டிகளில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேற வேண்டியது தான்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பில் 10 அணிகள்!

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 55ஆவது போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே ஒவ்வொரு ரன்னாக எடுத்து வந்த நிலையில், அவ்வப்போது பவுண்டரியும் அடித்தனர். ஆனால், சிக்ஸர் மட்டுமே அடிக்கவில்லை. போட்டியின் 3ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். டெவான் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பந்து அவரது பேட்டில் பட்டு கீப்பர் கைக்கு சென்றது. ஆனால், யாரும் அவுட் கேட்கவில்லை. ரெவியூவும் எடுக்கவில்லை. அப்போது கான்வே ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். 

ODI World Cup: முதல் போட்டியில் Ind vs Aus அதுவும் சென்னைல தான்; அக்டோபர் 15ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

எனினும், அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 24 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த மொயீன் அலி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் 7 ரன்களில் வெளியேறினார். முதல் 10 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. மாறாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைப் போன்று சிஎஸ்கே வீரர்கள் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் ஹீரோக்களை சந்தித்த தோனி: நம்பர் 7 ஜெர்சியை கொடுத்து கௌரவப்படுத்திய சிஎஸ்கே!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!