லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் திருவிழா நடக்கிறது. அதுவும், 1426 நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூரிலிருந்து கூட ஏராளமான ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
IPL 2023: சேப்பாக்கத்தில் கொஞ்ச நேரம் ஆட்டம் காட்டிய நாய் – இது ரெண்டாவது முறை!
சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிரசாந்த் சோலங்கி, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், மார்க் உட், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அடித்து ஆட துவங்கினர். இதில், கொஞ்சம் கூடுதலாக நல்ல ஃபார்மில் இருக்கும் ருத்துராஜ் முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகிறார். ஆகையால், தனது வான வேடிக்கையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். மார்க் வுட், கிருஷ்ணப்பா கவுதம், ஆவேஷ் கான், குர்ணல் பாண்டியா என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.
IPL 2023: ரோகித்துக்கு ஓபனிங்கலாம் செட்டே ஆகாது, மிடில் ஆர்டர் தான் - அனில் கும்ப்ளே அட்வைஸ்!
கிருஷ்ணப்பா கவுதம் ஓவரில் கெய்க்வாட் 0, 6, 0, 6, 2, 6 என்று ஒரே ஓவரில் 3 சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். பவர்பிளே என்று சொல்லப்படும் முதல் 6 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு மும்பையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது.
IPL 2023: ஒரே மேட்ச் தான், யாருன்னு காட்டிய லக்னோ; பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
இதே போன்று, 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் 90 ரன்களும், 2018 ஆம் ஆண்டு சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களும் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்றைய போட்டியில் பவர்பிளேயில் அடித்ததே அதிகபட்சமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ருத்துராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 50 ரன்களும், டெவான் கான்வே 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 39 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
Back to back fifties for Ruturaj Gaikwad in IPL 2023.
50* from just 25 balls, he is here to take over Chennai in the future. pic.twitter.com/MzZQiYe8qU