IPL 2023: ஜடேஜா அபார பவுலிங்.. சன்ரைசர்ஸை சொற்ப ரன்களுக்கு சுருட்டியது சிஎஸ்கே..!

By karthikeyan V  |  First Published Apr 21, 2023, 9:40 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெறும் 134 ரன்களுக்கு சுருட்டிய சிஎஸ்கே அணி, 135 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது. சிஎஸ்கே அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டி.நடராஜனுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டார்.

Latest Videos

சிஎஸ்கே அணி:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரனா, ஆகாஷ் சிங்.

IPL 2023: நீயெல்லாம் (வார்னர்) இனிமேல் ஐபிஎல்லில் ஆட வராத..! சேவாக்கின் விமர்சனத்துக்கு வார்னரின் பதில்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஹாரி ப்ரூக், மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷீத், புவனேஷ்வர் குமார், மயன்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்களாக ஹாரி ப்ரூக் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் களமிறங்கினர். ப்ரூக் 18 ரன்னிலும், அடித்து ஆடிய அபிஷேக் ஷர்மா 26 பந்தில் 34 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். 

IPL 2023: நற்பெயரை வச்சு மட்டுமே இனிமேல் ஓட்ட முடியாது.. ஸ்கோர் செய்யணும்.! பிரித்வி ஷாவுக்கு கடும் எச்சரிக்கை

அதன்பின்னர் ராகுல் திரிபாதி (21), மார்க்ரம்(12), ஹென்ரிச் கிளாசன்(17), மயன்க் அகர்வால்(2), மார்கோ யான்சென்(17) ஆகிய அனைவருமே சொற்ப ரன்கள் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 134 ரன்கள் மட்டுமே அடித்தது. சிஎஸ்கே பவுலர்கள் அபாரமாக பந்துவீசி சன்ரைசர்ஸ் அணியை ஸ்கோர் செய்ய விடாமல் தடுத்தனர். அபாரமாக பந்துவீசிய ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினர்.

135 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கே அணி விரட்டிவருகிறது.
 

click me!