IPL 2023: சென்னை சேப்பாக்கத்தில் மகுடம் சூடப்போவது யாரு? வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?

Published : Apr 12, 2023, 06:03 PM IST
IPL 2023: சென்னை சேப்பாக்கத்தில் மகுடம் சூடப்போவது யாரு? வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?

சுருக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான  போட்டி சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக இரு அணிகளுமே சம பலத்துடன் இருக்கின்றன.

கோலியின் மகள் பாலியல் தொடர்பான மிரட்டல் வழக்கு; கைதானவர் மீதான குற்றச்சாட்டு ரத்து - மும்பை உயர்நீதிமன்றம்!

இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேராக 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 11 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இங்கு 160 முதல் 180 ரன்கள் அடித்தாலே அது சவாலாக ஸ்கோராக இருக்கும். ஆனால், இதற்கு முன்னதாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது. 2ஆவதாக ஆடிய லக்னோ அணி 205 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில், சென்னை அணியில் மொயீன் அலி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பறினர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்யலாம்.

IPL 2023:19ஆவது ஆட்டநாயகன் விருது பெற்ற ரோகித் சர்மா: மனைவியுடன் வீடியோ காலில் வெற்றியை பகிர்ந்த அழகிய தருணம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உத்தேச ஆடும் 11:

டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்க்ய ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்‌ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உத்தேச ஆடும் 11:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், த்ருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டன், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சகால்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!