இதுவரையில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் முதல் 9 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 6 முறையும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. பத்து அணிகள் இடம் பெற்ற இந்த 16ஆவது சீசனில் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மட்டுமே 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. லக்னோ அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2ஆவது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா அணி 3ஆவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 4ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளது.
இதுவரையில் மொத்தமாக 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில், முதல் 9 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதுவும் முதலில் ஆடிய அணி 6 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று அடுத்து நடந்த 7 போட்டிகளில் முதலில் ஆடிய அணி ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2ஆவது ஆடிய அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
IPL 2023: கேட்சையும் கோட்டை விட்டு, முகத்திலும் அடி வாங்கி காயமான சூர்யகுமார் யாதவ்!
அதோடு, முதலில் ஹோம் மைதானங்களில் ஆடிய அணிகள் தான் வெற்றி பெற்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோவில் நடந்த போட்டியில் லக்னோ அணியும், பெங்களூருவில் நடந்த போட்டியில் பெங்களூரு அணியும், சென்னையில் நடந்த போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தாவில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணியும், கவுகாத்தியில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி முதல் ஹோம் மைதானங்களில் விளையாடிய அந்தந்த அணிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. பெங்களூருவில் நடந்த போட்டியில் லக்னோ வெற்றி பெற்றது. டெல்லியில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது
இந்த நிலையில் தான், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன்னதாக சென்னையில் நடந்த போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார். அதே போன்று உடல்நிலை சரியில்லாத நிலையில், மொயீன் அலியும் விளையாடவில்லை. பென் ஸ்டோக்ஸூம் விளையாடவில்லை. இந்த நிலையில், இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர்கள் இடம் பெறாத நிலையில், துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ரஹானே, சான்ட்னர் ஆகிய வீரர்கள் இடம் பெற்று சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பேட்டிங்கில் ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி விளையாடும் 200ஆவது போட்டி இது என்பதால், இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.