IPL 2023:ரோஹித் சர்மா பொறுப்பான அரைசதம்! மும்பை அணிக்கு முதல் வெற்றி.. டெல்லி அணிக்கு தொடர்ச்சியாக 4வது தோல்வி

ஐபிஎல் 16வது சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவின் பொறுப்பான அரைசதத்தால் டெல்லி கேபிடள்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
 


ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்தது. 2 அணிகளுமே இந்த சீசனில் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின.  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

Latest Videos

பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மனீஷ் பாண்டே, யஷ் துல், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், அபிஷேக் போரெல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நெஹால் வதேரா, ரித்திக் ஷோகீன், ரைலீ மெரிடித், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.

IPL 2023: ஐபிஎல்லில் கோலியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்து வரலாறு படைத்த வார்னர்

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒருமுனையில் டேவிட் வார்னர் நிலைத்து நிற்க, மறுமுனையில் பிரித்வி ஷா(15), மனீஷ் பாண்டே(26), யஷ் துல்(2), ரோவ்மன் பவல்(4), லலித் யாதவ்(2) ஆகியோர் சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். 6வது விக்கெட்டுக்கு வார்னருடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். வார்னர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக அடித்து ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல், 25 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 54 ரன்களை விளாசினார். வார்னர் 47 பந்தில் 51 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 172 ரன்கள் அடித்தது  டெல்லி கேபிடள்ஸ் அணி.

173 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த இஷான் கிஷன் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா அதிரடியாக பேட்டிங் ஆடி 29 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார்.

IPL 2023: இந்த சீசனின் வலுவான RR-ஐ எதிர்கொள்ளும் CSK..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

பொறுப்பை தனது தோள்களில் சுமந்து சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மா 65 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் டிம் டேவிட்டும் கேமரூன் க்ரீனும் இணைந்து போட்டியை முடித்து வைத்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பெற, டெல்லி அணி தொடர்ச்சியாக 4வது தோல்வியை இந்த சீசனில் சந்தித்தது.
 

click me!