ஐபிஎல் டிராபியுடன் ஆந்திரா முதல்வரை சந்தித்த அம்பத்தி ராயுடு, சிஎஸ்கே உரிமையாளர்!

By Rsiva kumar  |  First Published Jun 8, 2023, 8:23 PM IST

ஐபிஎல் டிராபியுடன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும், சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் ஆந்திரா முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து, ஐபிஎல் டிராபி சென்னை கொண்டு வரப்பட்டு, முதலில் டிநகர் பகுதியில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டது.

19 போட்டிகளில் 51 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த முகமது சிராஜ்!

Tap to resize

Latest Videos

அதன் பிறகு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட இந்தியா: ஆஸ்திரேலியா 469க்கு ஆல் அவுட்!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, அரசியலில் களமிறங்கியுள்ளார். அதுவும், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் மக்களுக்கு சேவையாற்ற நினைப்பதாக அம்பத்தி ராயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். மேலும், எப்போதும் மக்கள் மத்தியில் இருக்க விரும்புவதாக கூறினார். அரசியலுக்கு வந்தால், நேர்மையாக பணியாற்றுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷர்துல் தாக்கூரை எடுத்ததற்கு அவரால் முடிந்ததை செய்துவிட்டார் - 4 நோபால், 75 ரன்!

இந்த நிலையில், அம்பத்தி ராயுடு மற்றும் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல்ட் டிராபியுடன் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Had a great meeting with honourable CM YS Jagan Mohan Reddy garu along with respected Rupa mam.and csk management to discuss the development of world class sports infrastructure and education for the underprivileged. Govt is developing a robust program for the youth of our state pic.twitter.com/iEwUTk7A8V

— ATR (@RayuduAmbati)

 

click me!