IPL 2022 அவரை தக்கவைக்க முடியல.. ஆனாலும் மெகா ஏலத்தில் கண்டிப்பா எடுப்போம்..! சிஎஸ்கே சி.இ.ஓ உறுதி

By karthikeyan VFirst Published Dec 3, 2021, 6:31 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் சீனியர் வீரர் ஒருவரை கண்டிப்பாக ஏலத்தில் எடுப்போம் என்று சிஎஸ்கே அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் புதிதாக இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 30ம் தேதி அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டன.

சிஎஸ்கே அணி, ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), தோனி (ரூ.12 கோடி), மொயின் அலி (ரூ.8 கோடி) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி) ஆகிய 4 வீரர்களையும் தக்கவைத்தது.

ஃபாஃப் டுப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, சாம் கரன் ஆகிய வீரர்களை தக்கவைக்கவில்லை. சிஎஸ்கே அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றிய சுரேஷ் ரெய்னா இனிமேல் சிஎஸ்கே அணியில் ஆட வாய்ப்பில்லை. அவரை புதிய 2 அணிகளில் ஒன்று, ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஃபாஃப் டுப்ளெசிஸை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் உள்ளது. அதை அந்த அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன், கடந்த சில சீசன்களாக சிஎஸ்கே அணிக்காக மிகச்சிறப்பாக ஆடி, 2 சீசன்களில் ஃபைனலுக்கு அழைத்து சென்றவர் ஃபாஃப் டுப்ளெசிஸ். அவரை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் உள்ளோம். ஆனால் அது எங்கள் கையில் மட்டும் இல்லை என்று காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

கடந்த சீசனில் கூட 633 ரன்களை குவித்து, சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார் டுப்ளெசிஸ். கடந்த சீசனில் அதிக ஸ்கோர் அடித்த 2வது வீரர் டுப்ளெசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!