16 வயது ரசிகனின் கடிதத்துக்கு தோனி அளித்த பதில்..! 4 வார்த்தையில் மனதை கவரும் தோனியின் ரிப்ளை

Published : May 18, 2022, 04:44 PM IST
16 வயது ரசிகனின் கடிதத்துக்கு தோனி அளித்த பதில்..! 4 வார்த்தையில் மனதை கவரும் தோனியின் ரிப்ளை

சுருக்கம்

தனது 16 வயது ரசிகனின் கடிதத்துக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல்லில் 4 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான சிஎஸ்கே அணி இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. சிஎஸ்கே நன்றாக ஆடினாலும், ஆடாவிட்டாலும், சிஎஸ்கே ரசிகர்கள் எப்போதுமே சிஎஸ்கே ரசிகர்கள் தான். அதற்கு முக்கிய காரணம் கேப்டன் தோனி.

தோனிக்காகத்தான் ஏராளமானோர் சிஎஸ்கேவின் ரசிகர்களாக இருக்கின்றனர். தோனிக்கும் உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் வெறித்தனமான ரசிகர்களும் பலர் உள்ளனர்.

இந்த சீசன் சிஎஸ்கேவிற்கு சரியாக அமையவில்லை என்றாலும், அடுத்த சீசனிலும் தோனி ஆடுவார் என்பதால், 2020ல் லீக்குடன் வெளியேறி 2021ல் கோப்பையை வென்றதை போல, 2023ல் கோப்பையை வெல்வார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

தோனீயின் மிகத்தீவிரமான ரசிகர்களில் ஒருவரான 16 வயது இளம் ரசிகன், தோனிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். தோனி தன் வாழ்வில் எப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார், ரசிகர்கள் மனதில் எந்தளவிற்கு இடம்பிடித்துள்ளார் என்பதை விவரித்து அந்த ரசிகர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதம் தோனியின் பார்வைக்கு செல்ல, அதற்கு, Well written. Best wishes (சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்) என எழுதி அதில் ஆட்டோகிராஃப் போட்டுள்ளார்.  அதை சிஎஸ்கே அணி சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் அது வைரலாகிவருகிறது.

தோனி ரசிகரின் கடிதமும், அதற்கு தோனி அளித்த பதிலும் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!