ENG vs NZ: நியூசி.,க்கு எதிரான டெஸ்ட் தொடர்.. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Published : May 18, 2022, 02:31 PM IST
ENG vs NZ: நியூசி.,க்கு எதிரான டெஸ்ட் தொடர்.. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட்  போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூன் 2 முதல் 27 வரை இந்த டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததன் விளைவாக, ரூட் கேப்டன்சியிலிருந்து விலக, பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கேப்டனாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஸ்டோக்ஸ் தலைமையிலான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் செயல்படவுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி ப்ரூக், ஜாக் க்ராவ்லி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், க்ரைக் ஓவர்டன், ஆலி போப், மேத்யூ பாட்ஸ்.
 

PREV
click me!

Recommended Stories

yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?
Dhoni's Future: தோனி 2026 IPL-ல் விளையாடுவது கஷ்டம்; CSK சொதப்பினால் மட்டுமே வாய்ப்பு - அஷ்வின்