LSG vs KKR:மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு மாற்றாக அதிரடி வீரர்! முக்கியமான போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published May 18, 2022, 2:14 PM IST
Highlights

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் இன்னும்5 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் பிளே ஆஃபிற்கு தகுதிபெற 3 அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாகததால், ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியமான போட்டி.

குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ள நிலையில், எஞ்சிய 3 இடங்களுக்கு 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதில் முக்கியமான போட்டி இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது.

13 போட்டிகளில் ஆடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணியும், 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணியும் இன்றுமோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் லக்னோ அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஆனால் கேகேஆர் அணி வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

அந்தவகையில், இந்த முக்கியமான போட்டியில் லக்னோ அணியின் காம்பினேஷனில் ஒரு மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காத மார்கஸ் ஸ்டோய்னிஸ் நீக்கப்பட்டு, எவின்லூயிஸ் சேர்க்கப்படலாம்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக்  (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், மோசின் கான், ரவி பிஷ்னோய், துஷ்மந்தா சமீரா,  ஆவேஷ் கான்.

கேகேஆர் அணியில் மீண்டும் தமிழகத்தை சேர்ந்த பாபா இந்திரஜித்துக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட்கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.
 

click me!