மைக் ஹசிக்கு நெகட்டிவ் வந்த நிலையில் மீண்டும் கொரோனா பாசிட்டிவ்..!

Published : May 11, 2021, 03:08 PM IST
மைக் ஹசிக்கு நெகட்டிவ் வந்த நிலையில் மீண்டும் கொரோனா பாசிட்டிவ்..!

சுருக்கம்

சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தநிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது.  

ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், ஐபிஎல் 14வது சீசன் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அப்படி கொரோனா பாசிட்டிவ் என்று வந்த சிலரில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசியும் ஒருவர். மைக் ஹசிக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால், அவர் சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மற்ற ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஆஸி., செல்வதற்காக மாலத்தீவுக்கு சென்றுவிட்டனர். ஹசி மட்டும் சென்னையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

3 தினங்களுக்கு முன் மைக் ஹசிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தது. ஆனாலும் தனிமைப்படுத்தப்பட்டுத்தான் இருந்தார் மைக் ஹசி. தான் குணமடைந்துவிட்டதாக அவரே தெரிவித்தும் இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அவருக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், மீண்டும் பாசிட்டிவ் என்று வந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 5வது T20: மரண காட்டு காட்டிய இந்தியா.. 46 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி.யை வீழ்த்தி அசத்தல்
நாய் அடி, பேய் அடி..! டி20யில் கன்னி சதத்தை பதிவு செய்த இசான் கிஷன்.. நியூசி.க்கு 272 ரன்கள் இலக்கு