யுவராஜ் சிங் மற்றும் ஹசல் கீச் தம்பதிக்கு 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
சண்டிகரில் கடந்த 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தவர் யுவராஜ் சிங். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விளையாடியுள்ளார். இதில், எத்தனையோ ஏற்ற இறக்கங்களை பார்த்துள்ளார். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சர் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்: பிபிசிஐ அறிவிப்பு
நாற்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்களும், 304 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8,701 ரன்களும், 58 டி20 போட்டிகளில் விளையாடி 1,177 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை ஹசல் கீச்சிற்கும், யுவராஜ் சிங்கிற்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆசிய கோப்பைக்கான இலங்கை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், தான் தற்போது யுவராஜ் சிங் மற்றும் ஹசல் கீச் தம்பதிக்கு 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா! குவியும் வாழ்த்து!
பெண் குழந்தைக்கு ஆரா என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் குட்டி இளவரசி ஆராவை நாங்கள் வரவேற்று, எங்கள் குடும்பத்தை நிறைவு செய்வதால், தூக்கமில்லாத இரவுகள் மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.