அவங்களுக்காக எவ்வளவோ பண்ணியிருக்கேன்.. கொஞ்சம் கூட மதிக்க மாட்ராங்க.. ஆர்சிபி, பஞ்சாப் அணிகளை மறைமுகமாக விளாசிய கெய்ல்

By karthikeyan VFirst Published Nov 26, 2019, 5:57 PM IST
Highlights

ஆர்சிபி, பஞ்சாப் உட்பட உலகம் முழுதும் டி20 லீக் தொடர்களில் அவர் ஆடிவரும் அணிகளை கடுமையாக விளாசியுள்ளார் கிறிஸ் கெய்ல்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், ஆதாம் - ஏவாள் காலத்தில் இருந்து கிரிக்கெட் ஆடிவருகிறார். 1999ம் ஆண்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆடிவரும் கெய்ல், 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் ஆடியும் ஓய்வே பெறமாட்டேன் என அடம்பிடித்து ஆடிவருகிறார். 

ஐபிஎல் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் பெரும்பாலான டி20 தொடர்களில் கெய்ல் ஆடிவருகிறார். கெய்ல் ஓடவே மாட்டார், ஃபீல்டிங்கில் படுமந்தம். ஆனாலும் அவரது அதிரடியான பேட்டிங்கிற்காகவே டி20 லீக்குகளில் அணிகளால் போட்டி போட்டு எடுக்கப்படுகிறார். 

ஐபிஎல்லில் கூட அவர் அடித்த 175 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோர். 10ல் 3 போட்டிகளில் தான் அவர் ஆடுவார். ஆனாலும் அவருக்கான டிமாண்ட் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவர் சரியாக ஆடாத போட்டிகளில் அவர் சார்ந்த அணி தோற்றுவிட்டால், தான் மட்டுமே அதிகம் டார்கெட் செய்யப்பட்டு விமர்சிக்கப்படுவதாக உணர்ந்த கெய்ல், அதுகுறித்த தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் மெசான்ஸி சூப்பர் லீக்கில் ஜோஸி ஸ்டார்ஸ் அணியில் ஆடினார். அந்த அணி ஸ்பார்ட்டான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதால், தொடரை விட்டு வெளியேறியது. இதையடுத்து சொந்த நாட்டுக்கு திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய கெய்ல், நான் பல டி20 லீக் தொடர்களில் பல்வேறு அணிகளுக்காக ஆடியிருக்கிறேன், இன்னும் ஆடிவருகிறேன். அதனால் இந்த அணியை பற்றி மட்டும் சொல்லவில்லை. பொதுவாகவே சொல்கிறேன். நான் சரியாக ஆடாத ஒருசில போட்டிகளில் நான் சார்ந்த அணி தோற்றுவிட்டால், என்னால் தான் தோற்றுவிட்டதாக பேசுகிறார்கள். ஆனால் நான் அந்த அணிகளுக்காக செய்ததை நினைத்து பார்க்க மாட்டேங்கிறார்கள். டி20 லீக் தொடர்களில் ஆடும்போது எனக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லில் அவர் ஆடிய ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகளையும்தான் மறைமுகமாக இதில் இணைத்து பேசியுள்ளார். 2018 சீசனில் ஆர்சிபி அணி அவரை தக்கவைப்பதாக வாக்கு கொடுத்து ஏமாற்றியது. அப்போதே அதுகுறித்த ஏமாற்றத்தை பதிவு செய்திருந்தார் கெய்ல் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!