புஜாராவையே கதறவிட்ட பவுலர் யார் தெரியுமா..? அவரே சொல்லியிருக்கார் பாருங்க..!

By karthikeyan VFirst Published Feb 5, 2023, 10:19 PM IST
Highlights

தனது கெரியரில் தான் எதிர்கொண்ட கடினமான பவுலர் யார் என்று இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
 

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 2010ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 98  டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 7014 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் ஆர்டரில் ராகுல் டிராவிட் ஆடிய முக்கியமான 3ம் வரிசையில் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. ராகுல் டிராவிட் என்ற மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டரின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. அப்பேர்ப்பட்ட இடத்தை தனது நேர்த்தியான பேட்டிங் மற்றும் மிகச்சிறந்த பொறுமையாலும் நிரப்பியவர் புஜாரா.

6 பந்தில் 6 சிக்ஸர்கள்.. சீனியர் பவுலரை தெறிக்கவிட்ட இஃப்டிகார் அகமது..! வைரல் வீடியோ

புஜாரா சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர்.  ஆனால் அதைவிட சிறப்பானது அவரது பொறுமையும் நிதானமும் தான். எந்த விதமான நெருக்கடியான சூழலிலும் மனதை தளரவிடாமல் நம்பிக்கையுடன் களத்தில் பொறுமையாக நிலைத்து நின்று ஆடக்கூடிய மனவலிமை கொண்டவர் புஜாரா.

அடுத்ததாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தீவிரமாக தயாராகிவரும் புஜாரா, வெளிநாட்டு கண்டிஷனில் எதிர்கொள்ள கடினமான பவுலர் குறித்து பேசியுள்ளார்.

என் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவர்தான்..! ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

இதுகுறித்து பேசிய புஜாரா, டேல் ஸ்டெய்ன் மற்றும் மோர்னே மோர்கல் ஆகிய இருவரும் அவர்களது கெரியரின் உச்சத்தில் இருந்த 2013-14ல் அவர்களை எதிர்கொண்டிருக்கிறேன். அவர்கள் பவுலிங்கை எதிர்கொள்வது கடும் சவால் தான். இங்கிலாந்தின் ஆண்டர்சனை எதிர்கொள்வதும் சவால். ஆனால் அதையெல்லாம் விட ஆஸ்திரேலிய கண்டிஷனில் கம்மின்ஸை எதிர்கொள்வது தான் மிகக்கடினம். என்னை பொறுத்தமட்டில் வெளிநாட்டு கண்டிஷனில் எதிர்கொள்ள மிகக்கடினமான பவுலர் கம்மின்ஸ் தான் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

click me!